சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று ஆந்திராவில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன்மாதம் 25ம் தேதி தனது வீட்டுக்கு அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இந்தக் கொலை வழக்கில் சிக்கினர். இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான சம்போ செந்தில் இன்னும் சிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி ஜூலை 15ம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், அதிகாலையில் நீலாங்கரை அருகே வைத்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சீசிங் ராஜா போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமலன், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜா உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை 2 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கைதான சீசிங் ராஜா மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியவர் சீசிங் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர்தான் இந்த சீசிங் ராஜா. ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் அவரைப் பழி தீர்க்கவே மொத்தப் பேரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக ஒரு தகவல் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே கைதானவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, மனைவி பொற்கொடி, காதலி அஞ்சலை ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}