சென்னை: ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
ஸ்பா என்பது அழகு, மசாஜ், பேசியல், உடல் சிகிச்சைகள் உள்ளிட்ட பல ஆரோக்கியம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட தெரப்பி வழங்கும் மையமாகும். சென்னையில் பல இடங்களில் உடல் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஸ்பாக்கள் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இங்கு கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு, போன்றவற்றில் வலியை போக்க மசாஜ் செய்யப்படுகிறது. மேலும் உடலில் வலி நீங்க பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் புத்துணர்ச்சி பெற இந்த ஸ்பா மையங்களை நாடுகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் சில ஸ்பா சென்டர்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பா சென்டர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சோதனையின் போது உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}