"உங்களுக்குப் புரியவைக்க வேறு வழி தெரியலபா".. சென்னை போலீஸின் வேற லெவல் மீம்ஸ்!

Feb 06, 2023,12:28 PM IST
சென்னை: சென்னை போலீஸ் டிவிட்டர் பக்கம்  வேற லெவலுக்கு மாறி வருகிறது. மக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் மீம்ஸைப் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.



மீம்ஸ் என்பது நாம் சொல்ல விரும்பும் கருத்தை மிகவும் எளிய முறையிலும், நகைச்சுவை கலந்தும் வெளிப்படுத்தும் ஒரு அருமையான ஊடகமாகும்.  ஆனால் இதை இன்று பலர் கேவலமான பிரசாரங்களுக்கும், யாரையாவது திட்ட வேண்டும் என்றால் அதற்கும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இப்படிப்பட்ட அருமையான ஊடகத்தை வைத்து மக்களுக்கு எத்தனை எளிமையாக கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை காவல்துறை விளங்க வைத்து வருகிறது. சமீப காலமாக தமிழ்நாட்டின் பல்வேறு காவல்துறை டிவிட்டர் பக்கங்களிலும் இதுபோன்ற மீம்ஸ் வழி விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிகரித்துள்ளன.

அதில் சென்னை காவல்துறையின் விழிப்புணர்வு மீம்ஸ்கள் சிலவற்றைப் பார்க்க நேரிட்டது. உண்மையிலேயே வேற லெவல் கற்பனை என்றால் அது மிகையில்லை.. அதில் ஒன்றைப் பார்ப்போம்.

"வலுவான கடவுச்சொல்லின் முக்கியத்துவத்தை உங்களுக்குப் புரியவைக்க எங்களுக்கு வேறு வழி தெரியலபா!" Make your password long and strong for your safety. இதுதான் சென்னை காவல்துறை போட்டிருந்த ஒரு டிவீட்.  இந்த டிவீட்டைப் போட்டிருந்தது சென்னை தென் மண்டல இணை ஆணையர் அலுவலக டிவிட்டர் பக்கம். 

சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு இது. பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச் சொல் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வீடியோ மீம்ஸ் இது.

அதில், சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்தின் வீடியோ கிளிப்பிங் போட்டுள்ளனர். கம்ப்யூட்டர் நம்மிடம் புதிய பாஸ்வேர்ட் என்டர் பண்ணச் சொல்கிறது.. அதற்கு நீங்கள் tamilnadu123 என்று போடுகிறீர்கள். உடனே கம்ப்யூட்டர், பாஸ்வேர்டில் "கேபிடல்" கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.. உடனே நீங்கள் "chennai123" என்று போடுகிறீர்கள்.. அதைப் பார்த்த கம்ப்யூட்டருக்கு நெஞ்சு வலி வந்து அதிர்வது போல போட்டுள்ளனர்.

பார்த்ததுமே குபுக்கென்று சிரிக்க வைக்கும் இந்த மீம்ஸில், பாஸ்வேர்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வும் வேகமாக நமது மனதில் புகுவதை உணர முடியும். சென்னை காவல்துறையின் இந்த வீடியோ மீம்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்