சென்னை: சென்னை, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆறு மாவட்டங்களில் காலையிலேயே சூப்பரான மழை கொட்டியது. இந்த அடாத மழையிலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தனது சகாக்களோடு வாக்கிங் போய் தனது டெடிகேஷனை வெளிப்படுத்தினார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை லேசாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த மழை அடுத்த 3 மணி நேரத்திற்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று சொல்லப்பட்டதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவ, மாணவியர் குடைகளைப் பிடித்தபடியும், ரெயின் கோட் போட்டபடியும், நனைந்தபடியும் பள்ளிகளுக்குக் கிளம்பிச் சென்றனர். அதான் இவ்வளவு மழை பெய்யுதே லீவு விட்டாதான் என்னவாம் என்ற ஏக்கப் பெருமூச்சையும் மழையோடு மழையாக நனைந்தபடி விட்டுச் சென்றனர் குழந்தைகள்.
மா.சு சூப்பர் வாக்கிங்: இந்த அடாத மழையிலும் தனது அன்றாடக் கடமையை நிறைவேற்றி அசத்தியுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். அதுதாங்க வாக்கிங் போய் கலக்கியுள்ளார்.
மா.சுப்ரமணியம் ஒரு பிட்னஸ் ப்ரீக். எந்த இடத்தில் இருந்தாலும் காலையில் வாக்கிங் போவதை விடவே மாட்டார். மலையாக இருந்தாலும் சரி, மழையே பெய்தாலும் சரி, விடாமல் வாக்கிங் போவார். அப்படித்தான் இன்று காலையிலும் கூட கொட்டிய மழைக்கு மத்தியில் கூலாக வாக்கிங் போய் சூடாக ஒரு வீடியோவையும் போட்டு விட்டுள்ளார்.
உடம்பு முக்கியம். உடம்பு நல்லாருக்கனும்னா உடற்பயிற்சி முக்கியம்.. என்ன காலநிலை என்றாலும் சோம்பேறியாக இருக்காதீங்க.. உங்க உடம்போட ஆரோக்கியம் உங்க கையில் என்பதையே வேகமாக நடக்கும் மா.சுவின் இந்த வாக்கிங் வெளிப்படுத்துகிறது.
சூப்பர் சார்.. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாகட்டும்.. உங்களுக்கும்தான் மக்களே!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}