சென்னை: சென்னையில் பெரிய அளவிலான மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் திடீர் கன மழை பெய்து மக்களை அதிர வைத்து விட்டது. குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்து விட்டனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில்தான் அடித்து வருகிறது. இதனால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென கன மழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என பல பகுதிகளிலும் கன மழை வெளுத்து விட்டது.

முக்கியமாக முகப்பேர் மேற்கு, பாடி, அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் சென்னையில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை எதையும் தரவில்லை. இதனால் மக்களும் மழை குறித்த எச்சரிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் அண்ணா நகரில் பெய்த மழை சற்றே அதிர வைத்து விட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}