என்னாது..சென்னை "சன்"னுக்குப் பக்கத்துல போய்ருச்சா.. வெதர்மேன் குசும்பு!

May 16, 2023,02:57 PM IST

சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் இருக்காரே.. அவரோட குசும்புக்கு அளவே இல்லை. சென்னையை கலக்கி வரும் வெயில் கொடுமையை ஜஸ்ட் ஒரு ஜாலியான மீம் மூலம் எளிதாக புரிய வைத்திருக்கிறார் மனிதர்.


சென்னையில் கடுமையான வெயில் வதைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக 104 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் தலை காட்டவே முடியாத நிலை. எங்கு பார்த்தாலும் வெயிலும், அனலுமாக இருக்கிறது. மக்கள் வெளியில் வரவே அஞ்சும் அளவுக்கு வெயில் படு ஹாட்டாக இருக்கிறது.




வீட்டுக்குள்ளும் பேனைப் போட முடியவில்லை. போட்டால் வெறும் அனல்தான் காற்றாக வருகிறது. காலை 6 மணிக்கே வெயில் தனது டூட்டியைத் தொடங்கி விடுகிறது. மாலை 6 மணி வரை வெயில் வெயில் வெயில் மட்டுமே. அப்படி ஒரு காட்டடியாக உள்ளது.


இந்த அளவுக்கு வெயிலை இதுவரை சென்னை மக்கள் அனுபவித்ததில்லை என்று கூறும் அளவுக்கு வெயில் கடுமையாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெயில் அப்டேட்ஸ் கொடுத்து வருகிறார். அவரது அப்டேட்டுகளை வியர்க்க விறுவிறுக்க மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் இன்று ஒரு மீம் போட்டுள்ளார் பிரதீப் ஜான். அதில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சூரியனக்கு வெகு அருகே சென்னை இருப்பது போல போட்டு வெயிலையே கலாய்த்துள்ளார். உண்மையில் அப்படித்தான் மாறிப்போய் விட்டதோ என்று கூறும் அளவுக்கு வெயிலும் மக்களை உருக்கிக் கொண்டுள்ளது.


கடந்த 3 நாட்களாகவே வெயிலின் அளவு சென்னையில் 104 டிகிரி அளவில் இருந்து வருகிறது. வேலூ���ில் 108 டிகிரிக்குப் போய் விட்டது. வழக்கமாக சற்று வெயில் குறைவாக உள்ள குளிர் சீதோஷ்ணம் உடைய நகரங்களிலும் கூட வெயில் கடுமையாக இருக்கிறதாம்.


அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தபோது வெயில் குறைவாக இருந்தது.. ஆனால் இப்போது அக்னிநட்சத்திரம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது போல.. சன்னுக்கு ஏதுடா சன்டே என்று ஒரு படத்தில் வசனம் பேசியிருப்பார் விவேக்.. அப்படித்தான் நிஜமாலுமே இருக்கிறது.. லீவே விடாமல் இப்படி டூட்டி பார்த்தா எப்படி சன்னே.. கொஞ்சம் கம்மியா  அடிக்கலாம்ல.. முடியலப்பா முடியலை!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்