சேசிங்னா இது .. சாம்பியன் போல கலக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. முதல் போட்டியிலேயே மாஸ்

Mar 23, 2024,10:26 AM IST

சென்னை: ஐபிஎல் இன் முதல் போட்டியே அட்டகாசமாக அதகளமாக ஆரம்பித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு சாம்பியன் போல விளையாடிய விதம் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது.


2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதினர்.  பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் சற்று சொதப்பினாலும் கூட குறிப்பாக கேப்டன் டூபிளசிஸ், விராட் கோலி போன்றோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் கூட கடைசி நேரத்தில் கரம் கோர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஜோடி அதிரடியாக பொரிந்து தள்ளிவிட்டது. இருவரும் இணைந்து 95 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு இட்டுச் சென்றனர். 173 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 




இதைத் தொடர்ந்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சாம்பியன் போல விளையாடியது. முதல் பந்தில் இருந்தே ரண்குவிப்பை தொடங்கியது சென்னை அணி. கேப்டனாக ருத்து ராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். ஆனால் ஒரு கேப்டன் பொறுப்புக்குரிய பதட்டமோ டென்ஷனும் ஒரு படபடப்போ எந்த விதத்திலும் அவரை பாதிக்கவில்லை . அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவும் இல்லை. மிக மிக ரிலாக்ஸ்ட்டாக வழக்கமான முறையில் அவர் அதிரடியாக ஆடினார். முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டிய விதம் ரசிகர்களை துள்ள வைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டியில் தனது சேசிங்கை மிக மிக ஜாலியாக பதட்டமின்றி  செய்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. எந்த பதட்டமும் இன்றி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் கூட புத்திசாலித்தனமான அவர்களது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபாரமான ஒரு வெற்றிக்கு இட்டுச் சென்றது.


சில வீரர்கள் ஸ்லோவாக விளையாடியதாக ரசிகர்களிடையே தோற்றம் ஏற்பட்டாலும் கூட அதன் தாக்கம் அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் தனது கோப்பையை தக்க வைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்து விட்டது.



 

இதுவரை கேப்டனாக களத்தில் அதகளம் செய்து வந்த தல தோனி நேற்று ஒரு மென்டராக மாறி மொத்த அணியையும் மிக அருமையாக வழிநடத்திச் சென்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங்கின் போது தோனி கேப்டன் பொறுப்பில் ருத்துராஜ் செயல்படும் விதத்தை, அவ்வப்போது அவருக்கு சரியான ஆலோசனைகளை கொடுத்தும் அருமையாக அணி அணியை எப்படி ஒரு சீனியர் வழிநடத்து வேண்டும் என்பதற்கு ஒரு அருமையான ரோல் மாடலாக நடந்து கொண்டார். அதே சமயம் நேற்றைய சேசிங்கின் போது தோனி விளையாடுவார் என்று ரசிகர்கள் மிக மிக ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர் . ஆனால் நீ ரிலாக்ஸ்டா இரு தல நாங்க ஜெயிச்சு காட்டுகிறோம் என்ற நோக்கத்திலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களே அருமையாக சேசிங்கை முடித்து சூப்பரான ஒரு வெற்றியை கொண்டு போய் அவரிடம் சமர்ப்பித்து விட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்