IPL2024: 2வது போட்டி.. குஜராத் டைட்டன்ஸுக்கு ஆப்பு வைக்குமா.. சென்னை சூப்பர் கிங்ஸ்?

Mar 26, 2024,05:17 PM IST

சென்னை:  சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.


17 வது ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.  இதில் சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சென்னை அணியின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸும், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னையும் சந்திக்கவுள்ளன.




முன்னாள் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் அபாரமாக தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவு இருக்கலாம். எனவே இன்றைய போட்டியில் சென்னையை தோற்கடிக்க குஜராத் தீவிரமாக முயலும் என்று எதிர்பார்க்க முடியும். அதே சமயம் கடந்த பைனலில் கொடுத்த அதே அதிரடியான பதிலை இந்த முறையும் சென்னை தனது சொந்த மண்ணில் வைத்து குஜராத்துக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை பந்தாடி வென்றது நினைவு இருக்கலாம். அப்போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, ரஹானே, ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினர். பந்து வீச்சில், முஸ்தபிசுர் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருந்தார். தீபக் சஹரும் கலக்கியிருந்தார்.  இந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை எந்த வகையான உத்தியுடன் எதிர்கொள்ளும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


தோனி கேப்டன் பதிவிலிருந்து விலகி நிலையில், புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் தனது முதல்  போட்டியை வெற்றியில் தொடங்கி உள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் அந்த வெற்றி பயணம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இதுவரை ஐந்து முறை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத் அணி மூன்று முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறையும் வென்றுள்ளன. அதே சமயம் கடைசியாக சந்தித்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வென்றுள்ளது.


மெட்ரோ ரயில்கள் காத்திருக்கு மச்சாஸ்!


சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில் சிறப்பு சேவையை மேற்கொள்ளவுள்ளது. அதாவது இன்று இரவு 1 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 


ஆன்லைன் மூலமாகவும் பயணச் சீட்டைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,  இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைத்திலிருந்து மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்