சென்னை: ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
அகமதபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 21ம் தேதி முதல் குவாலிபயர் போட்டியும், மே 22ம் தேதி எலிமினேட்டர் போட்டியும். நடைபெறும். சென்னையில் மே 24ம் தேதி, 2வது குவாலிபயர் போட்டி நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் இறுதிப் போட்டி நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இப்போதுதான் சென்னைக்கு இறுதிப் போட்டி வருகை தருகிறது. அதாவது 12 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இது தோனிக்கு பிசிசிஐ செய்யும் சிறப்பான பேர்வேல் பரிசாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

ஏற்கனவே முதல் கட்ட ஐபிஎல் போட்டி அட்டவணையை வெளியிட்டிருந்த பிசிசிஐ தற்போது 2வது கட்ட போட்டிகளுக்கான அட்டவணையையும் அறிவித்துள்ளது. அதன்படி 52 போட்டிகள் இந்த 2வது கட்ட அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. ஏப்ரல் 8ம் தேதி இரண்டாவது கட்ட போட்டிகள் தொடங்கும். அன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன. அனைத்து பிளே ஆப் போட்டிகளும் மாலையில்தான் தொடங்கும்.
2023ம் ஆண்டு போலவே இந்த முறையும் 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் மோத வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்றுள்ள குரூப்பில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
2வது குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}