சென்னை: அரசு முறை பயணமாக இங்கிலாந்து செல்கிறேன். அங்கே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சமூகத்தை தலைநிமிர செய்த தந்தை பெரியாரின் படத்தை என் கையால் திறந்து வைக்க போகிறேன். அதை நினைத்து இப்போதே மகிழ்ச்சி கடலில் திளைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்றைக்கு நாடு என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR என்ற சிறப்பு வாக்காளர் திருத்தம் - என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் அதிகம் இங்கு விளக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்காகதான், நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் ஒரு நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் பீகார் சென்று, வாக்காளர் உரிமைப் பயணம் என்று சகோதரர் ராகுல் காந்தி நடத்தி வரும் அந்த விழிப்புணர்வு பயணத்தில் நான் பங்கேற்றேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
நாளையதினம் நான் ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம்.
இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது, முதலீட்டாளர்களும் தொழில்நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட இருக்கிறது! அதை என்னுடைய திருக்கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துக்கொண்டு இருக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி - எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது!
அவர் வலியுறுத்திய, சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - ஏற்றத்தாழ்வு மறுப்பு - தன்னம்பிக்கை - அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
ஒரே படம்தான்..ஹீரோவானார் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்..சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
{{comments.comment}}