சென்னை: கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2 நாட்கள் நடக்கும் வர்த்தக மையத்தின் வேளாண் வணிகத் திருவிழாவினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. குறு தானியம், நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். நடபாண்டில் 5. 65 லட்சம் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நல்ல முன்னெடுப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் விவசாயிகளுக்கு உருவாகும். வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து வருகிறோம். உரங்களை போதிய அளவில் வழங்கும் படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தமிழகம் முந்திரி வாரியம் என்னும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளோம். 7 விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று தந்துள்ளோம். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 456.46 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்
யோவ் என்று விளித்து.. தவெக தலைவர் விஜய்க்குப் பதிலடி கொடுத்த திமுக ராஜீவ் காந்தி!
வாக்குறுதி எண் 456.. கொடுத்தது யாரு.. திமுகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. விஜய் பேச்சு
அம்மா அம்மான்னு சொல்லிட்டு.. அதிமுகவை அதன் கோட்டையில் வைத்து கடுமையாக விமர்சித்த விஜய்!
கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை
இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!
தமிழன்னையே!
{{comments.comment}}