அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Aug 28, 2025,06:24 PM IST

சென்னை: இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியுடன், தற்போது மேலும் 25 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு மொத்தம் 50 சதவீதமாகும். இந்த அதிகப்படியான வரியின் காரணமாக  இந்தியாவில்  இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால்,  தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 


இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது. 




இந்தச் சூழலில்  தமிழக  தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்