4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

May 07, 2025,04:57 PM IST

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம். நாடு போற்றும் நான்காண்டு! பல்லாண்டு! என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேருந்தில் ஏறி ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடம் குறைகளை நிறைகளை கேட்டறிந்தார். 


நான்காண்டு திமுக ஆட்சியின் நிறைவு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:




திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - மாவட்ட பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்! என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "திராவிட மாடல் ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம். 


கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற  மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி! ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; 


தொலைநோக்குப் பார்வையோடு இன்று செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம் உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

news

2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

சென்னையில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்.. பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது

news

50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள்.. அண்ணாமலைக்கு எத்தனை?

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்