விழுப்புரம்: புயல் மழை பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த மாதம் 30ம் தேதி மாலை கரையை கடக்கத் துவங்கி இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்த அன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலேயே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவிற்கு கனமழை பெய்து விழுப்புரத்தை ஒரு வழி செய்து விட்டது. மயிலம், கூட்டேரிப்பட்டு,ரெட்டணை,பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புயல் மழை பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிச்சயமாக அனுப்புவோம். நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள். நம்பிக்கையோடு தான் அனுப்புகிறோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் அதையும் சமாளிப்போம்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சுமார் 3.18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. மழை நின்ற பிறது பயிர் சேதங்களை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைக்க கோரிக்கை வைப்போம்.
விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக கனமழை பெய்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு துணை முதல்வர் உதயநிதியை உடனே போகச் சொல்லியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 2000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் அவர் தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் CycloneFengal சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, #NDRF-இல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}