சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். வடகிழக்கு குஜராத்தில் உள்ள வாட்நகரில் பிறந்தவர் மோடி.அ ங்கு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடிந்தார்.1978ம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த வெளிப் பள்ளியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அதன்பின்னர் 1983ல் அவர் குஜராத்தி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
8 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியராக மாறிய பிரதமர் மோடி இன்று இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவி வகித்து வருகிறார். இன்று அவருடைய பிறந்த நாள். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் தள பதிவில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நமது அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த வல்ல தலைமையின் கீழ் தேசம் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியாக கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிர தமிழ் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்திற்கு அவரது தொலைநோக்கு தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தமது வாழ்த்துச் செய்திகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 74 ஆம் பிறந்தநாள் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். இந்திய திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் எக்ஸ் தள பதவில், மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடைய உடல், நலம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}