சென்னை: கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் ஒருவர், துறை அமைச்சருடன் சென்று பார்வையிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வராயன் மலைப்பகுதியில்தான் பெருமளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. எந்த ஆட்சி அமைந்தாலும் இதைத் தடுக்க முடிவதில்லை. தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி பல ஊறல்களைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வராயன் மலைப்பகுதி கிராமங்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றி முன்னேறாமல் உள்ளது. இதனால்தான் இந்த அவல நிலை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சில யோசனைகளைத் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் உதயநிதி சென்று பார்டையிட வேண்டும். நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}