ஹாங்காங்: சீனாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர், உயர்ந்த பொறுப்பில் உள்ளோர் முதல் கட்டமாக நீக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. டிவிட்டர் தொடங்கி மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் என பலரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் சீனாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர் மற்றும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் முதல் கட்டமாக வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர். இதன் மூலம் செலவுகளைக் குறைத்து திறனை அதிகரிக்க முடியும் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

மார்ச் 10ம் தேதிக்குள் தாங்களாகவே விலகினால் சில சலுகைகளையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதிக்கு பிறகு நீக்கப்படும் ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காதாம்.
வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 3 மாத கால பஃபர் பீரியடையும் கூகுள் அறிவித்துள்ளது. அதாவது வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு 3 மாதங்களுக்கு சம்பளம் மட்டும் தரப்படுமாம்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில்தான் 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இவர்களது வேலை நீக்கத்தில் 100 ரோபோட்டுகளும் கூட அடக்கம். கூகுள் தலைமை அலுவலகத்தில் கான்டீன்களை சுத்தம் செய்யும் பணியில் இந்த ரோபோட்டுகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதற்கும் பராமரிப்பு செலவாகிறது என்று கூறி அவற்றையும் நீக்கி விட்டனர். இந்தியாவிலும் 400க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}