பெய்ஜிங்: "உனக்கு வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் மாறலை.. அப்படியே இருக்கு".. அப்படின்னு நீலாம்பரி பாராட்டிப் பேசும்போது படையப்பா அடையும் சந்தோஷத்தை நாம வெளியில் பார்க்க வாய்ப்பில்லைன்னாலும்.. கண்டிப்பா உள்ளுக்குள் உற்சாகமாகத்தான் இருந்திருக்கும்.
யாருக்குத்தாங்க வயசாவது பிடிக்கும்.. அப்படியே இளமையோட இருக்கணும்.. அழகா இருக்கணும்.. வயசே ஆகக் கூடாது அப்படின்னு நினைக்கிறவங்கதான் அதிகம். இளமை மீதான மோகம் யாருக்குத்தான் இல்லை.. எல்லோருக்கும் நிறையவே இருக்கிறது. இதனால்தான் உலகம் முழுவதும் வயதாவைத் தடுக்க முடியுமா.. அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக சீனாவில் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நமது உடலில் வயது ஆவதை தீர்மானிக்கும் செல்களைக் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி இயங்குகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த செல்கள்தான் நமது உடலின் வயோதிகத்துக்கு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை விட்டமின் சி சப்ளிமென்ட் கொடுத்து வீரியத்தைக் குறைத்தால் வயோதிகத்தையும் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நமது முதுகெலும்பு மோட்டார் நியூரான்களைச் சுற்றிலும் இது இருப்பதாகவும், இதுதான் வயோகிதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளை செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளமையானவர்களை விட வயதானவர்களிடம்தான் இந்த செல்கள் அதிகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்த செல்கள்தான் வயோதிகத்திற்கு காரணம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
கடந்த 7 வருடமாக நடந்து வந்த ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது. ஹாங்காங் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நமது உடலின் முக்கிய அங்கம் முதுகெலும்பு. நமது இயக்கத்திற்கும் அது மிக மிக முக்கியமானது. இப்போது முதுகெலும்பைச் சுற்றியுள்ள செல்கள்தான் நமது வயோதிகத்திற்குக் காரணம் என்ற தகவல் ஆச்சரியத்தையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியுள்ளது. ஆய்வுகள் தொடர்கின்றன..!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}