மின்னல் வேக விளம்பரம்.. கோடிக்கணக்கில் கொட்டுது பணம்.. கலக்கி வரும் ஜெங் சியாங் சியாங்!

Feb 08, 2024,05:46 PM IST

பெய்ஜிங்: இது சோசியல் மீடியா காலம்.. அதை வைத்து பலரும் பண மழையில் குளித்து வருகின்றனர். சோசியல் மீடியாவைக் கையாளக் கூடிய திறமை மட்டும் இருந்தால் போதும் நீங்க எதுல ஜெயிக்கறீங்களோ இல்லையோ.. சம்பாதிப்பதில் கலக்கலாம். அப்படித்தான் அசத்திக் கொண்டிருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஜெங் சியாங் சியாங்.


சீனாவின் டிக்டாக் வெர்ஷன் ஆன டோயின் தளத்தில் இவரது வீடியோக்கள் மிக மிக பிரபலம். சோசியல் மீடியா இன்ப்ளூயன்சரான இவர் இதை வைத்து  ஆயிரக்கணக்கில் அல்ல பாஸ்.. கோடிக்கணக்கில் சம்பாதித்துக் குவிக்கிறாராம்.


பல்வேறு தயாரிப்புகளை புரமோட் செய்து இவர் போடும் வீடியோக்கள் மிக மிக பாப்புலராக உள்ளன. இதுதான் இவரை கோடீஸ்வரியாக்கியுள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இவர் சம்பாதிக்கிறாராம்.




டோயின் தளத்தில் 50 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் இவர். இதில் இவரது வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாமே வித்தியாசமான வீடியோக்கள். இவரது புரமோஷன் பாணியே வித்தியாசமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் பேசி புரமோட் செய்கிறார் சியாங்  சியாங்.


வழக்கமாக எல்லோரும் என்ன செய்வார்கள்.. அந்த புராடக்ட் குறித்து விலாவாரியாக பேசுவார்கள்.. விளக்கிச் சொல்வார்கள் இல்லையா.. இவர் அப்படி இல்லை. சுருங்கப்  பேசுகிறார்.. எப்படி தெரியுமா.. "வெறும் 3 செகன்ட்"தான்.. என்ன நம்ப முடியலையா.. நம்புங்க பாஸ்.. நிஜம்தான்.


அதாவது கிட்டத்தட்ட பன்ச் வசனம் பேசுவது போலத்தான். அந்த புராடக்ட் குறித்து 3 செக்ன்ட்டில் பேசி அடுத்த புராடக்டுக்குப் போய் விடுகிறார். இந்த புதிய பாணி விளம்பர ஸ்டைல் பலரையும் கவர்ந்துள்ளது. இதுதான் இவருக்கு அதிக பாலோயர்களைக் கொண்டு வந்துள்ளது. இவரது வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் வியூஸ் குவிகிறது.


லைவ் ஸ்டிரீம் செய்து இந்த விளம்பரங்களைச் செய்கிறார் சியாங் சியாங். ஒரு உதவியாளரை வைத்துள்ளார் சியாங். அவர் ஒரு பெட்டியில் விளம்பரப்படுத்த வேண்டிய தயாரிப்புகளை போட்டு  அவரிடம் தள்ளுகிறார். அதை ஒவ்வொன்றாக எடுத்து மின்னல் வேகத்தில் விளம்பரப்படுத்துவார் சியாங் சியாங். ஒரு பொருளை எடுப்பார்.. கேமரா முன் காட்டுவார்.. விலையைச் சொல்வார்.. அப்படியே தூக்கிப் போட்டு விடுவார். அவ்வளவுதான் முடிந்தது. இப்படியே அடுத்தடுத்த பொருளுக்குப் போய் விடுவார்.


இவரது வார வருவாய் என்ன தெரியுமா.. கேட்டா மயக்கம் போட்ருவீங்க.. ஒரு வாரத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 120 கோடி வரை சம்பாதிக்கிறாராம் சியாங் சியாங். இவரது விளம்பர ஸ்டைலுக்கு நல்ல பலன் கிடைப்பதால்தான் அவரது மவுசு நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறதாம். இவர் விளம்பரப்படுத்தும் பொருட்களினை விற்பனை சூப்பராக நடக்கிறதாம்.


எப்படியெல்லாமோ சம்பாதிக்க முடியும் என்பதை விட திறமை இருந்தால் இப்படியும் சம்பாதிக்கலாம் என்பதற்கு சியாங் சியாங் நல்ல உதாரணம்!

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்