ஓவர்டேக் செய்வதில் போட்டி.. தனியார் பஸ் டிரைவர்களிடையே மோதல்.. பஸ் ஏற்றிக் கொன்ற.. டிரைவர்!

Jul 24, 2024,06:28 PM IST

ஹைதராபாத்: இரண்டு தனியார் பேருந்துகளுக்கு இடையே ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் பஸ் டிரைவர் சுதாகர் ராஜு என்பவரை மீது மற்றொரு பஸ் டிரைவர் சீனிவாசராவ் பேருந்து ஏற்றி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குண்டூர் மாவட்டம்  பத்தரெட்டி பகுதியில் உள்ள  பொன்னூரில் சுதாகர் ராஜு வசித்து வருகிறார். சுதாகர் ராஜூவுக்கு மனைவி அருணா மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் மார்னிங் ஸ்டார் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அதேபோல் விஜயவாடா அய்யப்ப நகர் யானைமலாகுதுரு பகுதியில் சீனிவாச ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 


இந்த இரண்டு டிராவல்ஸ் பஸ்களும் விஜயவாடா செல்வதற்காக  திங்கட்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்றன. இரண்டு பேருந்துகளும்  இரவு 1.30 மணி அளவில் சித்தூர் மாவட்டம் கடல் டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டன. இதில் ஒரு பேருந்தின் கண்ணாடி உடைந்தது.




இதனால் கோபமடைந்த மற்றொரு பேருந்து  ஓட்டுநர் சுதாகர் ராஜு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் சண்டையில் போய் முடிந்தது. இதனைதொடர்ந்து சீனிவாச ராவ் பேருந்தை எடுத்துக்கொண்டு டோல்கேட் நோக்கிச் சென்றார். சுதாகர் ராஜு பஸ்ஸை ஓவர்டேக் செய்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சீனிவாச ராவ், சுதாகர் ராஜ் மீது பேருந்தை ஏற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றார். இதில் சுதாகர் ராஜு பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அறிந்த பாங்குராபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.  டோல்கேட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினார். இதில் சீனிவாச ராவ் சுதாகர் ராஜு மீது பேருந்து ஏற்றி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சீனிவாச ராவ் மீது 302 பிரிவின் கீழ் கொலை வழக்கில்  போலீசார் கைது செய்தனர்.


ஒரு உப்புக் கல்லுக்கு கூட பிரயோஜனம் இல்லாத சிறிய சண்டைக்காக சக ஓட்டுநர் மீது பேருந்து ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேருந்தை ஓவர்டேக் செய்ததற்காக இதுபோல கொடூரமாக கொலை செய்தது மனிதத் தன்மையற்ற செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்