சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் ஒன்று ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பானது. இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது:
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. வளர்ச்சி மிகு தமிழ்நாடாகவும், அமைதி மிகு தமிழ்நாடாகவும் விளங்கி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைகிறது. இளைய சக்தியான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உலக முதலீட்டாளர்களின்ந் விருப்ப மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மின்னணுப் பொருட்கள், மின்வாகன உற்பத்தியில ஓசூர் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் ஓசூரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி மையமாக மாற்ற, நவீன உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, ஓசூர் நகருக்கான சிறப்பு பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில், விமான நிலையம் அமைவது அவசியம். ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 30 மில்லியன் (3 கோடி) பயணிகளைக் கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
திருச்சியில் பிரமாண்ட கலைஞர் நூலகம்
முதல்வர் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், சென்னை, மதுரையைத் தொடர்ந்து தற்போது கோயம்பத்தூரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படவுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அந்த வரிசையில், திருச்சி மாநகரில் மாபெரும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை அறிவுக் களஞ்சியமாக மாற்றும் வகையில் இந்த நூலகம் அமையும் என்று முதல்வர் தெரிவித்தார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}