அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

Jan 08, 2025,06:49 PM IST

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காவல்துறையும், அரசும் எந்த பாரபட்சமும் பார்காகமல் நடவடிக்கை எடுத்துள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். அதேபோல் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார். மதுரையில் போராட்டம் நடத்திய குஷ்பூவும் கைது செய்யப்பட்டார்.  இந்த கைது நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகின.


இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


 


அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், சம்பவம் நடந்த இடத்தில் சுற்றி இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை அடிப்படையாகக் கொண்டுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புலன் விசாரணையில் குற்றவாளி வேறு யாராக இருந்தாலும் சரி மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அவர்கள் மீது தயவு தாட்சனையே இல்லாமல் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். நான் இதை 100% உறுதியோடு சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. 


அதேபோல்  இந்த வழக்கில் விரைவில் விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்படும்.


போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை  எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். யார் போராட்டம் நடத்துவதாக  இருந்தாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். நேற்று கூட  அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கள நிலவரத்தை ஆய்வு செய்து போலீஸ் அனுமதி தரும். இது காவல்துறையின் கட்டுப்பாடு.


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் அப்போதைய அதிமுக அரசு நடந்து கொண்ட விதம் அனைவருக்குமே தெரியும். முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை காப்பாற்றும் நோக்கில்தான் அப்போதைய அரசு நடந்து கொண்டது. இப்போதைய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திமுக காரர் அல்ல, வெறும் திமுக அனுதாபி அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை குற்றவாளி எந்தக் கட்சி என்ற பாகுபாடே கிடையாது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படித்தான் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


சட்டையில் யார் அந்த சார் என்று பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் இப்படி நடந்து கொண்டதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். கடந்த அதிமுக ஆட்சியைப் பார்த்து யார் அந்த சார் என்று கேட்டு என்னால் நூறு கேள்விகள் கேட்க முடியும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்