சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்துக் கூறிய கருத்துக்கள் பேசு பொருளாகியுள்ளன, பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இன்று நாடாளுமன்றத்தை இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன. பிரதமர் நரேந்திர மோடியே இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இதுதொடர்பாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில், எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்.. வாழ்க அம்பேத்கர்.. அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை
டேஸ்ட்டியான உணவுகள்.. உலக அளவில் இந்தியாவுக்கு என்ன ரேங்க் தெரியுமா.. அடடே சூப்பரப்பு!
{{comments.comment}}