சென்னை: எல்ஐசி இணையதளத்தின் முகப்புப் பக்கம் முழுக்க முழுக்க இந்தியில் மாற்றப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எல்ஐசியின் இணையதளத்தின் முகப்புப் பக்கம் இந்தியில் வருகிறது. முழுமையாக இந்தியிலேயே உள்ளது. வேறு மொழிகள் என்றால் ஆங்கிலம் மற்றும் மராத்தி மட்டுமே உள்ளது. ஆனால் இந்த மொழி மாற்றப் பட்டனைத் தேட வேண்டியுள்ளது. காரணம், அதிலும் கூட இந்தியில்தான் எழுதி வைத்துள்ளனர். இதனால் முதல் முறையாக இந்தத் தளத்துக்கு வருபவர்கள் அதிர்ச்சி அடையும் நிலையே உள்ளது.
இந்த மொழித் திணிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எல்ஐசி இணையதளத்தை இந்தித் திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றியுள்ளனர். ஆங்கிலத்தை தேர்வு செய்யும் பட்டன் கூட இந்தியில்தான் உள்ளது. இது மத்திய அரசின் கலாச்சார மொழித் திணிப்பே தவிர வேறு எதுவும் இல்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை நசுக்கும் செயல் இது. அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்ததுதான் எல்ஐசி. அப்பிடி இருக்கையில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்புக்கு இப்படி துரோகம் செய்யலாம்?
இந்த மொழி சர்வாதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கை: பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.
அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}