சென்னை: கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை இன்று கூடியதும் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், எல்லா திறமைகளையும் பெற்ற ஒரு சிறந்த தலைவராக ஆளுமை பெற்று வாழ்ந்தவர். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கலைஞர் கருணாநிதி.இதனால் கலைஞர் கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அதே போல் எல்லா தலைவர்களின் பெயர்களிலும் ஒரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.ஆனால் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை.கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே வாசனும் தெரிவித்தார். இவர்களை தொடர்ந்து
சிந்தனைச் செல்வன், நாகைமாலி, இராமச்சந்திரன், டாக்டர்.சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ரா. ஈஸ்வரன், தி. வேல்முருகன்,பேரவைத் தலைவர் ஆகியோரும் விதி எண் 55 ஐ பயன்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் இணைந்து கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி, நாட்டில் முதல் இடத்தில் இருக்க கூடிய கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் கூட அவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கலைஞர் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். இதை எவ்வித தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன் என கூறினார்.
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க இன்றும் உயர்வு தான்... அதுவும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!
{{comments.comment}}