சென்னை: தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவிப்போருக்கு உதவ வாட்ஸ்அப் எண்ணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்:
அதி கனமழையால் அல்லலுறும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, எற்கனவே களப்பணியில் ஈடுபட்டுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ப.மூரத்தி, கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, ஞானதிரவியம் ஆகியோரைக் கூடுதலாக நியமித்துள்ளேன்.
உதவி தேவைப்படும் பொதுமக்கள் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், @tn_rescuerelief
என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொள்ளவும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
களம் குதித்த பொதுமக்கள், கட்சியினர்
இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்கள் பெருமளவில் இறங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் திரண்டு சென்று உதவி செய்து வருகின்றனர்.
பல்வேறு கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தென் மாவட்டங்களில் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் வெள்ளக்காடானதில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக தென்கோடி மாவட்டங்கள் நான்கும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}