அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறாரா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன அந்த பதில்!

Aug 05, 2024,06:53 PM IST
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி  வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு தனது தந்தை கருணாநிதி ஸ்டைலில், முதல்வர் முக ஸ்டாலின் நச் என்று பதில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது சம்பந்தமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக கூட்டங்களிலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். 



இது குறித்து அமைச்சர் உதயநிதியிடமே செய்தியாளர்கள் கேட்டபோது,, ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி செயலாளர் பதவியே எனக்கு மிகவும் பிடித்தது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்லவுல்ளார். அங்கு அதிக நாட்கள் தங்க உள்ளதால், அவருடைய வேலைகளை  கவனிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்ற பேச்சு பலமாக எழுந்தது.

இதுவரை துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் எதுவும் பதில் சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்ற முதல்வர் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார். கொளத்தூர் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது முதல்வர் கூறுகையில், சென்னையில் பருவ மழைக்காலத்தில் எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக கோரிக்கைகள் வலுத்துள்ளதே என்ற கேள்விக்கு, பதில் அளித்த முதல்வர் கோரிக்கைகள் வலுத்துள்ளது ஆனால் பழுக்கவில்லை என பதில் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்