சென்னை: சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே உத்வேகத்துடன் சாம்பியன்ஷிப் டிராஃபியையும் வெல்வோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் ஐ தேர்வு செய்தது.முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பிறகு நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 46, சௌத் ஷகீல் 62 , குஷ்டில் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசியாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 242 என்ற இலக்குடன் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கினாலும் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.சுப்மன் கில் அடுத்தடுத்து பவுண்டர்களை விளாசி 46 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த விராட் கோலி நிதானமாக விளையாட ஆரம்பித்தார். கில்லுக்கு பிறகு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் உயர்ந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷிர் பட்டேல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 111 பந்துகளில் சதம் விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாழ்த்து குறிப்பில்,
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அபார சதத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுகள். இதே உத்வேத்துடன் சாம்பியன் டிராபியை வெல்வோம் எனவும் பதிவிட்டுள்ளார்.
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}