கோத்ரேஜ் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Mar 10, 2025,03:18 PM IST

செங்கல்பட்டு:   செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 33 இடங்களில் தனது ஆலைகளை நிறுவி உள்ளது.குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதத்தில் இந்நிறுனம்  ஒரு ஆலையை நிறுவியுள்ளது.  இந்த ஆலையில், சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் ஆகியவற்றை தயாரிக்கப்பட உள்ளது.




இந்த ஆலையின் மூலம் 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும், அத்துடன் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசிற்கும், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.  


இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 


2024ம் ஆண்டு ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அடிக்கல் நாட்டிய, ஒரே ஆண்டில் ஆலை உற்பத்தியை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.  மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை  சந்தையாக கொண்டுள்ளன. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அத்துடன் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியும் வருகிறது. தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலமாக  தமிழ்நாடு இருக்கிறது.


ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெறும் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தமிழ்நாடு வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூக நிதியை உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டது. 50 விழுக்காடு அளவுக்கு, பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறாளிகளுக்கு வேலை வழங்க உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு விளங்குகிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்