சென்னை: கன மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. பல ஊர்களில் இப்போதே வெள்ளம் ஏற்படும் அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 9 வட மாவட்டங்களுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதிலும் 16ம் தேதி அதீத கன மழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதேபோல பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். அந்த அறிவுறுத்தல்கள்:
- விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும் முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி மு முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகார் வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை சுற்றுலாத்தலங்கள் வழிபாட்டுத் தலங்கள் நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம்.
- அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}