சென்னை: இசைஞானி இளையராஜாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைஞானியின் சிம்பொனி அரங்கேற்றம் மார்ச் 8ம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் நேரில் போய் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை மார்ச் 8ம் தேதி லண்டனில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. இந்த நாளுக்காக உலகெங்கும் உள்ள இளையராஜா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இளையராஜாவுக்கு வாழ்த்துகளும் குவிந்து கொண்டுள்ளன. சமீபத்தில், கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்போது, தமிழ்நாடு அரசு சார்பிலும் என் சார்பிலும், கலைஞர் சார்பிலும் உங்களைக் கெளரவிக்கிறேன் என்று கூறி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். அப்போது, ஐயாதான் (கலைஞர்) எனக்கு இசைஞானின்னு பெயர் சூட்டினார், அதான் நீடிக்குது என்று இளையராஜா கூற, எத்தனையோ பட்டங்கள் வந்தாலும் அதுதான் நிக்குது என்று கூறி மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இசைஞானியாக, உலக அளவில் எல்லா தமிழர் உள்ளங்கள், இல்லங்களில் குடியிருக்கிறீர்கள் என்று கூறிய முதல்வர், ஜூன் 3 உங்க பிறந்த நாளை 2ம் தேதிக்கு மாத்திக்கிட்டீங்க என்று கூற, எல்லாம் அப்பாவுக்காக என்று சொல்லி சிரித்தார் இசைஞானி. கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. அதே நாளில்தான் இளையராஜாவுக்கும் பிறந்த நாள். ஆனால் கலைஞர் பிறந்த நாளன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி அவரது முக்கியத்துவத்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக முதல் நாளுக்கு தனது பிறந்த நாளை மாற்றிக் கொண்டவர் இளையராஜா.
இளையராஜாவின் சிம்பொனி குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் விடை பெறும்போது, சமீபத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் பெயர் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு சிடி கொடுத்தாங்க. அவர் பாடியது. அதில் பெரும்பாலும் உங்க இசைதான். அதைத்தான் கேட்டுட்டிருக்கேன் என்று கூறி நெகிழந்தார் முதல்வர்.

இந்த சந்திப்பு தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}