சென்னை: கன மழையிலிருந்து மெல்ல மீண்டு வரும் சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் இன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வகைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று சென்னை, அதன் புறநகர்கள் மற்றும் பல்வேறு வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதிர்ஷ்டவசமாக மாலைக்கு மேல் மழை மெல்லக் குறைந்து தற்போது கிட்டத்தட்ட நின்று விட்டது. இதற்குக் காரணம், தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியிருப்பதால்.
இந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த இடத்தில் தூய்மைப் பணியாளர்களின் அயராத பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். கடந்த சில நாட்களாகவே அவர்கள்தான் முன்களத்தில் நின்று தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மழை நீர் வடிகால்களை தொடர்ந்து கண்காணித்து வருவது, எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அதை சரி செய்வது, சாக்கடைகள் சரியாக போகிறதா என்று பார்த்து அதை சரி செய்தது. சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பை உள்ளிட்டவற்றை அகற்றுவது என்று தொடர்ந்து அயராமல் பணி செய்து வருகிறார்கள்.
நேற்றும் கூட விடிய விடிய தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளும் கூட உடன் இருந்து பணிகளைக் கண்காணித்து முடுக்கி விட்டு வந்தனர். இவர்களது இந்த ஓய்வில்லா சேவை காரணமாகத்தான் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்கு துயரம் ஏற்படாமல் இந்த முதல் மழையை நாம் நிம்மதியாக கடக்க முடிந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}