சென்னை: முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது தனி செயலாளராக எம்.எஸ்.சண்முகமும், மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வரின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தனிச் செயலாளர்களாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உமாநாத் ஐஏஎஸ்
முதல் தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில்துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சண்முகம் ஐஏஎஸ்
இரண்டாவது தனி செயலாளரான சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை உள்ளிட்ட 12 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனு ஜார்ஜ் ஐஏஎஸ்
மூன்றாவது தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனு ஜார்ஜிற்கு முதல்வரின் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கப்டடுள்ளது.
இந்த தனிச் செயலாளர்கள் குறித்த அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}