சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும். இன்று நாம் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி மக்களின் எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் Umagine tn என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாடு 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும். இன்று நாம் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி மக்களின் எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும்.
சரியான திசையை நோக்கி மாநாட்டை ஒருங்கிணைத்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி. தமிழ்நாட்டின் நீடித்த நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு இந்த மாநாடு. வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் மற்றவர்களை விட முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. மின் வாகன உற்பத்தி வளரும் தொழில்நுட்பங்களை மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் கூடுதல் வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இன்று நாம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஓசூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடியில் எல்காட் பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளது.2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட நகரங்களிலும் எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன. நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது. உண்மையான வளர்ச்சி சமச்சீரான பரந்துபட்டதாக இருக்க வேண்டும். 900க்கும் மேற்பட்ட புதுத்தொழில் நிறுவனங்கள் உருவாக அரசு செயல்பட்டு வருகிறது. 2000த்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக திமுக அரசு உள்ளது. ஐடி துறை வளர மனித வளங்கள் மிக முக்கியம். அதற்காகவே எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் உருவாக்கினேன். தொழில் சார்ந்த திறன்களை வளர்க்க நான் முதல்வன் திட்டம் பெரும் உதவியாக உள்ளது.
கடந்த ஓராண்டில்10,035 ஆசிரியர்கள் 34,267 மாணவர்கள் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கான பயிற்சி பெற்றிருக்கின்றனர். இ சேவையை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்க தகவல் தொழில்நுட்பம் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. அரசு நினைத்து சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும். மக்களின் அலைச்சல், நேரம் மிச்சமாக வேண்டும். 2021ல் 14,927 ஆக இருந்த இ சேவை மையங்கள் 2024 முடிவில் 33,554 ஆக இருமடங்கு அதிகரித்துள்ளது. இனி மக்களுடைய எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும். முறைகேடு செய்ய நினைக்கிறவர்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். டிஜிட்டல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற தொழில்நுட்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}