சென்னை: மகாவிஷ்ணு என்பவரின் செயலால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சலசலப்பைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சும், அவர் நடந்து கொண்ட முறையும், தமிழ் ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசியதும் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிக்கே வந்து, மாற்றுத் திறனாளியான அரசுப் பள்ளி ஆசிரியரை, முதன்மைக் கல்வி அதிகாரியை விட உங்களுக்கு அறிவு அதிகமோ என்று கேட்டு நக்கல் செய்த செயல் பலரையும் கொதிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதது தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து நேரடியாக குறிப்பிடாமல் முதல்வர் வெளியிட்டுள்ள அந்த எக்ஸ் தள பதிவு:
மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.
தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.
அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}