சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் தினத்தையொட்டி போட்ட வாழ்த்துச் செய்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து டிவீட் போட்டுள்ளார்.
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என் ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளூர் தின நல்வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் மு.க..ஸ்டாலின் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட்டில்,
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி.. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}