சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு,என்னுடைய அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறிப்பாக வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலுமே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தற்போது வயநாடு தொகுதியை ராஜினாமா செய்து விட்டு, ரேபரேலி தொகுதியை மட்டும் வைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதற்கு ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோதா யாத்திரை தான் முக்கிய காரணம் என பேசப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ராகுல் காந்திக்கு தேசிய அளவில் இருக்கும் செல்வாக்கு கூடி உள்ளது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பியும் ,இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது 54 வது பிறந்தநாளை இன்று(ஜுன் 19) சிறப்பாக கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின், சோஷியல் மீடியா வழியாக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறுகையில், என்னுடைய அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}