அமைச்சர் பொன்முடி விவகாரத்தில்.. ஜனநாயகம் வென்று விட்டதாக.. முதல்வர் மு க ஸ்டாலின் ட்வீட் !

Mar 22, 2024,05:43 PM IST
 சென்னை: அமைச்சர் பொன்முடி விவகாரத்தில, இன்று மீண்டும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ள நிலையில்,அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான மாண்புமிகு உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு க ஸ்டாலின் ட்விட் போட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி திமுகவில் உயர் கல்வி அமைச்சராக இருந்தவர். இவர் வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து மூன்று வருட சிறந்த தண்டனை வழங்கியது. இதனால் இவர் அமைச்சர் பதவியில் நீக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்  அமைச்சர் பொன்முடி. இதன் காரணமாக இவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின்,ஆளுநர் ரவிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.ஆனால் ஆளுநர், அமைச்சர் பொன்முடி குற்றவாளி தான். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறியிருந்தார்.


இதனை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திற்கு மனு அளித்திருந்தார் முதல்வர். இந்த மனுவை விசாரித்த டி.ஒய் சந்திரசூட், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நாளை வரை ஆளுநருக்கு அவகாசம் அளிப்பதாக  நேற்று உத்தரவிட்டார். மேலும் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும் எதன் அடிப்படையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை   என சரமாரியாக  கேள்வி எழுப்பினார்.




இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு முடிந்ததை அடுத்து இன்று பொன்முடிக்கு மீண்டும் உயர் கல்வி அமைச்சராக பதவி வழங்கி, ஆளுநர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான மாண்புமிகு உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த தசாப்தத்தில், #இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் வறண்டு போவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை வைக்கும் தவறான சாகசங்களையும், பழமையான மரபுகளை வழங்குவதையும் கண்டனர். தேர்தல் 2024 ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது.  நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்