அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

Sep 15, 2025,09:21 AM IST

சென்னை: இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அன்புக் கரங்கள் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. அண்ணா பிறந்த நாளையொட்டி இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த சிறப்பான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்புக்கரங்கள் திட்டமானது, ஒரு புரட்சிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது.


மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இது.


அது மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.




இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:


1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).

2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)

3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்)

4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)

5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)


மாவட்ட ஆட்சியர் - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் கூட இதற்காக விண்ணப்பிக்கலாம்.


கீழ்க்காணும் ஆவணங்களுடன், அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். 


1. குடும்ப அட்டையின் நகல்

2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்

3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)

4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)

news

உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

news

என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்

news

Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

news

C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்