மதுரை, திருச்சியில் அமையும்.. டைடல் பூங்காக்கள்.. கட்டுமான பணிகளுக்கு.. இன்று அடிக்கல்!

Feb 18, 2025,10:40 AM IST

சென்னை: மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பூங்காக்களுக்கான கட்டுமான பணிகளுக்கு இன்று  காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு க ஸ்டாலின். 


திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 


சென்னை, கோவை ஆகிய இடங்களில் டைடல் பார்க் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர்.  மதுரையில் வட பழஞ்சி பகுதியில் ஐடி பூங்கா உள்ளது.




தென் மாவட்டங்களை பொறுத்தவரை மதுரை மையப் பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும்  ஐடி பணிகளின் தேவைகள் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மதுரையில் டைட்டில் பார்க் அமைய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கை எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நியோ டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். 


இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் நெல் வணிக வளாக பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான  9.97 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 52 சதுர அடி பரப்பில் தரைதளத்துடன் 12 மாடி கூடிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 314 கோடியே 29 லட்சத்து 51 ஆயிரத்து 821 கோடி செலவில் மதுரை நியோ டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் 5500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


திருச்சி டைடல் பூங்கா




அதேபோல் திருச்சி டூ மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் புதிய டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது . சுமார் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 5.58 லட்சம் சதுரடியில் தரை தளத்துடன் ஆறு மாடிகள் கொண்ட புதிய டைடல் பார்க் ரூபாய் 315 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.இதன் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.


இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைட்டில் பார்க் அமைய கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் துவங்க இருக்கின்றன. மேலும் 18 மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

news

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

news

அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்

news

அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்