சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட டிவீட் பரபரப்பாக பேசப்படுகிறது. நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்பதுதான் முதல்வர் போட்ட அந்த சஸ்பென்ஸ் ட்வீட்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை, மதுரையில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார். மேலும் இரும்பின் தொன்மை என்ற நூலையும் அவர் வெளியிடவுள்ளார். கீழடி இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வுகள் குறித்த டிவீட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். அதை ரீடிவீட் செய்து முதல்வர் போட்ட டிவீட்டில், நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த முக்கிய அறிவிப்பு என்ன என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் கிளம்பியுள்ளது. வழக்கம் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை முதல்வரின் டிவீட்டிலேயே போட்டு வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் தொகையை ரூ. 1500 ஆக அதிகரிக்கப் போகிறார் முதல்வர். அதுகுறித்த அறிவிப்புதான் நாளை வெளியாகப் போகிறது என்று சிலர் கணித்துள்ளனர். சிலர் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா என்ற குசும்புத்தனமான கேள்வியையும் கேட்டுள்ளனர்.
எது எப்படியோ நாளை வரை பொறுத்திருப்போமே.. எப்படியும் நல்ல விஷயமாகத்தான் இருக்கும். பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}