சென்னை: புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 86,000 மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ள முதல்வர் மு க ஸ்டாலின், ஏழை எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,மூத்த அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தங்கம் தென்னரசு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறார் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 29,187 பேருக்கும், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களில் பட்டா வழங்குவதற்கான பணிகளை செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}