கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்த நாள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

May 24, 2024,12:21 PM IST

சென்னை:  கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பினராயி விஜயன் 1944ம் ஆண்டு மே 24ம் தேதி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பினராயி என்ற கிராமத்தில் பிறந்தவர்.  1964ல் மாணவர் சங்கத்தில் ஈடுபட்டு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர்.  கேரளா வாலிபர் சங்கத்தில் மாநில தலைவராக இருந்தவர். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.




1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். ஈ. கே. நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998ல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலகுழுவில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா கூட்டணியில் முக்கியத் தலைவராக தற்போது வலம் வரும் விஜயன், 2வது முறையாக கேரள மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பினராயி விஜயன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்