"மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும்  மகிழ்ச்சி".. விஜய்யை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

Feb 07, 2024,11:55 AM IST
சென்னை: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி குறித்து, மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் தான் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்து உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக  தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்ற விஜயின் கொள்கைகளை  ரசிகர்கள், பொதுமக்கள், திரை பிரபலங்கள், கட்சி 
நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்  தமிழ்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக கடந்த 29 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். ஸ்பெயின் நாட்டு தொழில் முனைவோர்களுடன் பேசிவிட்டு, இன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு திரும்பினார் முதல்வர். விமான நிலையத்தில் செய்திாயளர்களிடைய அவர் பேசும்போது விஜய்குறித்து முதல்வரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு முதல்வர் பதிலளிக்கையில், மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி என்றார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனக்கு வாழ்த்து கூறிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், என அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்