சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த சிஎம்.. தனுஷும் வந்தாரே..  வைரலாகும் அந்த குட்டீஸ்!

Apr 22, 2023,12:51 PM IST
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் நடிகர் தனுஷ் வரை பல பிரபலங்கள் வந்திருந்தனர் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட ஒரு குட்டி பையனின் போட்டோ தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களங்கியது சென்னை அணி. ஆனால் 18.4 ஓவரிலேயே 3 விக்கெட்களை மட்டும் இழந்து 135 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.



இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற டி ஷர்ட் அணிந்து, மனைவி துர்கா ஸ்டாலினுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை செளந்தரராஜனும் சேப்பாக்கம் மைதானத்திற்கு மேட்ச் பார்க்க வந்திருந்தார். இவர்கள் தவிர அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சதீஷ் ஆகியோர் வந்திருந்தனர். டைரக்டர் வெங்கட் பிரபுவும் வந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலினும், தனுசும் அருகருகே அமர்ந்து மேட்ச் பார்த்தனர். இப்படி மேட்ச் பார்க்க வந்த பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானது. இவற்றுடன் குட்டி பையன் ஒருவன் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக, மஞ்சள் டி ஷர்ட் அணிந்து வந்திருந்தான். இந்த பையனின் போட்டோ தான் செம வைரலாகி வருகிறது. 



அப்படி சோஷியல் மீடியாவை கலக்கும் சிறுவன் வேறு யாரும் இல்லை. நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் தான். இவனும் சிஎஸ்கே மேட்ச் பார்க்க நேற்று சேப்பாக்கம் வந்திருந்தான். இவனது போட்டோடைவைத்தான் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து, இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர். அஜித்தின் மகன் மேட்ச் பார்க்க வந்ததை, அஜித்தே மேட்ச் பார்க்க வந்தது போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்