டெல்லி: தமிழக முதல்வர் விஜய் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. அது ரத்தாகி விட்டது. அடுத்த வாரம் புதிய தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார் முதல்வர் விஜய். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அது ரத்தாகி விட்டது.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தற்போது ரத்தாகி விட்டது. அவசரமாக சென்னை செல்ல வேண்டியிருப்பதால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சந்திப்பிற்கான புதிய தேதி அடுத்த வாரம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் மீண்டும் டெல்லி வந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று தெரிகிறது. தற்போது அவர் சென்னை திரும்புகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான கூட்டணி மற்றும் புதிய அரசு அமைந்தது தொடர்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இந்தச் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}