சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதையடுத்து சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்படடுள்ளன. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட அசவுகரியங்கள் இருந்தாலும் கூட மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்தப் பணிகளை மக்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் முக்கியமான மூன்று போக்குவரத்து மாற்றத்தை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்ரோ பணிகளை முன்னிட்டு 7ம் தேதி முதல் கீழ்க்கண்ட மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
பாதை 1 - ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே மடம் சாலை முதல் ராயப்பேட்டை ஹைரோடு வரை)
பாதை 2 - ராமகிருஷ்ணா மடம் சாலை (லஸ் ஜங்ஷன் முதல் திருமயிலை ரயில் நிலையம் வரை)
பாதை 3 - ராமகிருஷ்ணா மடம் சாலை (திருவெங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)
இதற்குப் பதிலாக மாற்று போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள், வாகனதாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிஎம்ஆர்எல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மெட்ரோ பணிகள் சிரமமில்லாமல் நடைபெறுவதற்காகவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யப்பட்டுள்ள மாற்றுப் போக்குவரத்து வழிகள் தொடர்பான விளக்கமான தகவல்களையும் மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}