கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: 30க்கு மேற்ட்ட இடங்களில் என்.ஐ.ஏ.  சோதனை

Sep 16, 2023,11:07 AM IST
கோவை:  கோவையில் கடந்த ஆண்டு காரில் சிலிண்டர் வெடித்த மர்ம சம்பவம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் தேசிய புலனாய்வு ஏஜென்சி சோதனை நடத்தி வருகிறது.

கோவை  உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர்  23ம் தேதி அதிகாலையில் ஒரு கார் வெடித்து சிதறிய சம்பவம் நடந்தது.  காரை ஓட்டி வந்த அப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின்  என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.  இதைத் தொடர்ந்து முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் அடங்கிய தாள்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் போலீசார்  கைது செய்தனர். இந்த வழக்கு உடனடியாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் திருவிக நகர், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களின் விவரங்களை சேகரித்து உள்ளோம். அதன்படி 200 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் அதிதீவிர ஐஎஸ் ஆதரவாளர்கள். மீதமுள்ள 180 பேர் தீவிர ஐஎஸ் ஆதரவாளர்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் ரகசியமாக போலீஸார் கண்காணித்து வருகின்றனர். 

தினமும் இவர்கள் எங்கெங்கு செல்கின்றனர், யாரை சந்திக்கின்றனர் என்பது போன்ற அனைத்து விவரங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் செல்போன் எண்கள், சமூக வலைதளப் பக்கங்கள், அதில் தொடர்பில் உள்ளவர்கள் என்பது போன்ற அனைத்து விவரங்களும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்