கைதிகளை நல்வழிப்படுத்த..  சூப்பர் திட்டம்.. திருக்குறள் வாசிங்க!

Sep 09, 2023,04:08 PM IST
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக தினமும் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் திருக்குறள் வாசிக்கப்படுகிறது.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்டம் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு தினசரி கற்பித்தல், நூலகம் மூலம் வாசித்தல் பயிற்சி யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக சிறை வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தினமும் காலை 7 மணிக்கு ஒரு கைதி மூலம் ஒரு திருக்குறள் வாசிக்கப்படுகிறது. அதற்குரிய பொருளையும் அந்த கைதி கூறுவார். சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கில் திருக்குறளை வாசிப்பர். ஒவ்வொரு பிரிவிலும் மைக் உள்ளது. குறள் கூறும் பொருள் என்ற திட்டம் இந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்