ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

Nov 22, 2024,06:56 PM IST

கோயம்பத்தூர்: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ள செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகிய வண்ணம் உள்ளனர். முதலில் சிறிதாக இருந்த விலகலானது இப்போது அதிகமாகி வருகிறது. கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவேந்திரன், மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி, கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த புகழேந்தி மாறன் என பலரும் விலகியுள்ளனர்.



இந்த நிலையில் தற்போது கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் அபிராமி உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாகிகள் கட்சி தடம் மாறிப் போவதாக குற்றம் சாட்டினர்.  

ராமச்சந்திரன் பேசுகையில், கட்சியின் கொள்கைக்கு புறம்பான வகையில் சீமானின் செயல்பாடுகள் உள்ளன. யாருடைய கருத்துக்களையும் கேட்க சீமான் தயாராக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால் விருப்பமிருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போய் விடுங்கள் என்று பேசுகிறார். மேலும் அருந்ததியினர் இனத்தவரை வந்தேறிகள் என்று அவர் சொல்வது எங்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.  இது ஏற்கத்தக்க பேச்சு கிடையாது.  அவருடைய பேச்சுக்கள் மக்களிடமிருந்து கட்சியினரை அந்நியப்படுத்துவதாகவே உள்ளது. இந்த அதிருப்தியால்தான் விலகியுள்ளோம். அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார் ராமச்சந்திரன்.

நேற்றுதான் நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென அவரது வீட்டுக்குப் போய் சந்தித்தார் சீமான். அப்போது அரசியலும் பேசினோம் என்று கூறியுள்ளார் சீமான். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது கடுமையாக எதிர்த்தவர் சீமான். அவரது கட்சியினரும் கூட கடுமையாக எதிர்வினையாற்றி வந்தனர். ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் எழுதவும் செய்தனர். இந்த நிலைியல் ரஜினியை சீமான் வீடு தேடிப் போய் பார்த்தது அக்கட்சியினருக்கே வித்தியாசமான உணர்வைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியைப் பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே கோவை வடக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது சலசலப்பை அதிகரிப்பதாக உள்ளது.

கட்சியினர் விலகல் குறித்து சீமான் இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் படு வேகமாக கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் விலகலை சீமான் சாதாரணமாக எடுத்துக் கொள்வது சரியாக இருக்குமா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம

news

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி

news

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!

news

தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

news

சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!

news

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?

news

வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!

news

பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு

news

ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்